உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்டூடியோ உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ஸ்டூடியோ உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வானுார் : ஆரோவில் அருகே ஸ்டூடியோ உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மயிலம் ரோட்டைச் சேர்ந்தவர் சதீஷ், 36; தே.மு.தி.க., பிரமுகரான இவர், மயிலம் ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மகாவீரபுரத்தைச் சேர்ந்தவர் திலீபன், 35; இவர், வீட்டு விசேஷத்திற்காக சதீஷிடம் போட்டோ ஆர்டர் கொடுத்துள்ளார்.அதற்கான ஆல்பத்தை கேட்டு, கடந்த 7ம் தேதி, திலீபன், பாபு, 35; அஜித், 35; உள்ளிட்ட 4 பேர் சதீஷ் ஸ்டூடியோவிற்கு சென்ற னர். பாக்கி தொகையையும் கொடுத்தால் மட்டுமே ஆல்பம் தருவேன் என சதீஷ் கூறியுள்ளார்.இதனால், அவர்களுக்குள் தகாறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நால்வரும், சதீைஷ தாக்கினர்.இது குறித்து ஆரோவில் போலீசில் சதீஷ் புகார் செய்தார். அதன் பேரில், திலீபன், பாபு, அஜித் உட்பட 4 பேர் மீது ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை