உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா தேர்தலையொட்டி, மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.விழுப்புரம் லோக்சபா தேர்தலையொட்டி, பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். விழுப்புரம் டவுன் காவல் நிலையம் எதிரிலிருந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச் ஆகியோர் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதப்படை போலீசார் காமராஜர் வீதி, எம்.ஜி., ரோடு, நேருஜி சாலை, நான்கு முனை சிக்னல் வழியாக திருச்சி நெடுஞ்சாலை வரை சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை