உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

வானுார்: வானுார் அடுத்த தழுதாளி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்முருன் மனைவி காவேரி. இருவரும் தங்கள் குழந்தைகளின் காதணி விழா அழைப்பிதழை, பேராவூரில் உள்ள தாய் வீட்டில் வைத்தவிட்டு மாலை வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர்.மாலை 5:00 மணிக்கு புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக வந்தபோது, பின் தொடர்ந்து பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், காவேரியின் மூன்று சவரன் தாலிச் செயின் மற்றும் ஒரு சவரன் செயினை பறித்தனர். அதில் தாலி சரடு கீழே விழுந்தது. ஒரு சவரன் செயினுடன் மர்ம நபர்கள் தலைமறைவாகினர். கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை