உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அரசு கல்லுாரியில் வணிகவியல் மன்ற விழா

வானுார் அரசு கல்லுாரியில் வணிகவியல் மன்ற விழா

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில், வணிகவியல் மன்ற விழா நடந்தது.துறைத் தலைவர் தேவநாதன் வரவேற்றார். விழாவிற்கு கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, வணிகவியல் பாடத்தின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக விருதாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையின் உதவி பேராசிரியர் வில்விஜயன் சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.உதவி பேராசிரியர் ஆல்பர்ட் பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை