உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., வேட்பாளருக்கு கரசானுாரில் ஓட்டு சேகரிப்பு

அ.தி.மு.க., வேட்பாளருக்கு கரசானுாரில் ஓட்டு சேகரிப்பு

வானுார் : கரசானூர் கிராமத்தில் அ.தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர் அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜிக்கு, ஆதரவாக ஓட்டு சேகரித்தனர்.விழுப்புரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். இவருக்காக நேற்று கரசானுாரில் அ.தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் ஓட்டு சேகரித்தனர்.அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி தலைமையில் செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்தும்; தற்போதைய தி.மு.க., அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் ஏமாற்றியது குறித்தும் பொது மக்களிடம் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.கிளைச் செயலாளர்கள் சங்கர், ராமச்சந்திரன், குமார், ஐ.டி., பிரிவு நிர்வாகிகள் கண்ணன், குணா, கஜேந்திரன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மாலா, பேபி, சகுந்தலா, மணி, கோவிந்தபெருமாள், கனகராஜ், பூங்காவனம், செல்வம், ராஜா, சுமதி, சுதா.தே.மு.தி.க., நிர்வாகிகள் சங்கர், சசி, மோகன், அருணகிரி, ஆறுமுகம், ரமேஷ், சுரேஷ், கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஓட்டுகேட்ட கையோடு, தனது வீட்டில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு தடபுடலாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை