|  ADDED : ஜூலை 30, 2024 11:46 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், போதைப் பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள் ளார்.விழுப்புரம் மாவட்டத் தில், கள்ளச்சாராயம், போதைப் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பான கலால் ஆய்வுக் கூட் டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 20ம் தேதியன்று பொலிரோ பிக்கப் வேனில் கடத்திய 258 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 2023ம் ஆண்டிலிருந்து, தற்போது வரை போதை பொருள் கடத்தல் குறித்து 11,579 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11,295 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.மேலும், 2024-25ம் ஆண்டிற்கான, அரசின் மறுவாழ்வு நிதியுதவி 50 ஆயிரம் ரூபாய் வழங்கிட வசதியாக மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில் எஸ்.பி., தீபக்சிவாச், கலால் உதவி ஆணையர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் ஹமீது உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.