உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடிபோதையில் தகராறு: 3 பேர் மீது வழக்கு

குடிபோதையில் தகராறு: 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே குடிபோதையில் பைக்கை எடுத்துச் சென்றதோடு, அதனை தட்டி கேட்ட வாலிபரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த எம்.குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன், 47; தச்சு தொழிலாளி. கடந்த 10 நாட்களுக்கு முன், ஊரில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, குடிபோதையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் பிரேம், முருகன் மகன் குமரன், பாரதி ஆகியோர் கோவில் அருகே நிறுத்தி வைத்திருந்த ராஜனின் பைக்கை, தள்ளி சென்று மறைத்து வைத்துள்ளனர். பிறகு, மீண்டும் கொண்டுவந்து அதே இடத்தில் விட்டுள்ளனர்.இதனையறிந்து, ராஜன் தட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த பிரேம் உட்பட 3 பேரும், ராஜனை தாக்கினர். இதுகுறித்து ராஜன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், பிரேம் உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை