உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊழியர்கள் கோஷ்டி பூசலால் பணியில் மெத்தனம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

ஊழியர்கள் கோஷ்டி பூசலால் பணியில் மெத்தனம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஊழியர்களுக்குள் கோஷ்டி பூசல் காரணமாக புற நோயாளிகள் பிரிவில் பதிவு செய்ய முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் புறநோயாளிகள் பிரிவில் 3000 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த பிரிவு மதியம் 12:00 மணி வரை மட்டுமே செயல்படும் என்பதால் சிகிச்சை பெற வருபவர்கள் காலை 7:30 மணிக்கு தங்கள் பெயரை பதிவு செய்ய வரிசையில் வந்து நிற்கின்றனர். 8:00 மணிக்கு முன் பதிவு துவங்கி, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.நேற்று காலை இப்பிரிவில் நோயாளிகள் பெயர் பதிவு செய்ய 8:40 மணி ஆகியும் ஊழியர்கள் யாரும் வராததால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் நீண்ட வரிசையாக காத்திருந்தனர். மருத்துவமனையில் ஊழியர்களுடைய கோஷ்டி பூசல் உருவாகி அதிகாரி எனக்கு வேண்டப்பட்டவர். இவர் எனக்கு வேண்டப்படாதவர் என்ற ரீதியில் அலட்சியமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் இது பற்றி கண்டு கொள்வதில்லை. மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை. இதனால் நோயாளிகளை பற்றி கவலைப்படாமல் அலட்சியமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இது பற்றி மாவட்ட கலெக்டர் மருத்துவமனையில் ஆய்வு செய்து அங்குள்ள சிக்கல்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை