உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

மயிலம்: புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மயிலம் பொம்மபுர ஆதீனம், எஸ்.எஸ்.பி.எஸ்., தமிழ் கல்லுாரி, தென்பெண்ணை தமிழ்ச் சாரல் அறக்கட்டளை சார்பில் நடந்த முகாமிற்கு, மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன், கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, ஊராட்சி தலைவர் சிவக்குமார், கவுன்சிலர் செல்வகுமார்முன்னிலை வகித்தனர். தென்பெண்ணை தமிழ்ச்சாரல் நிர்வாகி அஞ்சலாட்சி, தலைமையாசிரியர் அருள்மொழி வர்மன் வரவேற்றனர்.முகாமில், கண் மருத்துவர்கள் முகுந்தன்,சென்ரா ஆகியோர் பரிசோதனை செய்தனர். முகாமில், 30 பேர் பயனடைந்தனர். இதில் 3 பேர் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை