உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசின் வீடு கட்டும் திட்டம்: நாளை பணி துவக்கம்

அரசின் வீடு கட்டும் திட்டம்: நாளை பணி துவக்கம்

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் பணிகள் நாளை துவங்கப்பட உள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கான கணக்கெடுப்புகளில் உள்ள பயனாளிகளின் விபரம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கிராமசபைக் கூட்டத்தில் தேர்வு செய்ததன் அடிப்படையில் உள்ள தகுதியான குடிசை வீட்டில் வசிக்கும் பயனாளிகளுக்கு நிலையான கான்கிரீட் வீடு கட்டித்தரும் பொருட்டு, 4,094 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.துாய்மை பாரத இயக்கம் பகுதி 2 திட்டத்தின் கீழ் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 6,830 எண்ணிக்கையிலான தனிநபர் இல்ல கழிவறைகள் கட்ட சம்பந்தபட்ட பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இந்த வீடு கட்டும் பணிகளையும், தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டும் பணிகளையும் நாளை 19ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி