உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா  பறிமுதல்: வியாபாரி கைது

குட்கா  பறிமுதல்: வியாபாரி கைது

மயிலம் : மயிலம் அடுத்த சிங்கனுாரில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் அடுத்த சிங்கனுரைச் சேர்ந்தவர் சரவணன் செந்தமிழ், 34; பங்க் கடை நடத்தி வருகிறார். கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.அதன் பேரில், மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் கடையில் சோதனை செய்தனர்.அதில், 7 கிலோ அளவிலான குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து செந்தமிழ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை