உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டிற்குள் புகுந்து நகைகள் திருட்டு

வீட்டிற்குள் புகுந்து நகைகள் திருட்டு

வானூர்: கிளியனூர் அருகே பானிப்பூரி வியாபாரி வீட்டில் 4 சவரன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிளியனூர் அடுத்த எறையானூர், ராயுடு தெருவைச் சேர்ந்தவர் மன்னார் மனைவி அமுதா, 45; பானி பூரி விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள தனது கடைக்கு வியாபாரத்திற்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மருமகள் காய்த்ரி என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் காயத்திரி சிறிது நேரம் வீட்டை திறந்த நிலையில் வைத்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிறகுச்சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திருப்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் தாலி சரடு, அரை சவரன் கை சங்கிலி, 2 மோதிரங்கள் உள்பட 4 சவரன் நகைகள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.இது குறித்து அமுதா கிளியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ