உள்ளூர் செய்திகள்

ஊரு ரெண்டு பட்டா...

மரக்காணம் ஒன்றியத்தில் வி.சி., - பா.ம.க.,வினர் சுவர் விளம்பரங்கள் செய்ய விடாமல் தடுத்து வரும் நிலையில் அ.தி.மு.க.,வினர் பல இடங்களில் இரட்டை இலை சின்னத்துடன் சுவர் விளம்பரங்களை எழுதி வருகின்றனர்.விழுப்புரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் வி.சி., வேட்பாளர் ரவிகுமாரும், அ.தி.மு.க.,வில் பாக்கியராஜியும், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., முரளிசங்கரும் போட்டியிட்டுள்ளனர்.இந்நிலையில் மரக்காணம் ஒன்றியத்தில் வி.சி., கட்சி வேட்பாளருக்காக சுவர் விளம்பரம் செய்ய தி.மு.க., மேலிடம் ஒரு கிளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. அதன் பேரில் தி.மு.க.,வினர் வி.சி., கட்சி வேட்பாளரை ஆதரித்து அந்தந்த பகுதியில் பானை சின்னத்துடன் அனுமதியின்றி சுவர் விளம்பரங்களை எழுதினர்.இதில் பெரும்பாளான கிராமங்களில் சுவர் விளம்பரங்களை ஒரு தரப்பினர் வெள்ளை அடித்து அழித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் பரபரப்பு நிலவுகிறது. அனுமதியின்றி எழுதப்படுவதால் தட்டிக்கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மற்றொரு தரப்பினர் மாம்பழம் சின்னத்துடன் விளம்பரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.வி.சி., - பா.ம.க., என இரு கட்சியினரையும் இருதரப்பினர் மாறி, மாறி சுவர் விளம்பரம் செய்யவிடாமல் இருப்பதால், அ.தி.மு.க., தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மரக்காணம் ஒன்றியத்தில் அனைத்து இடங்களிலும் இரட்டை இலை சின்னத்துடன் சுவர் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை