உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சுப் போட்டி

கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சுப் போட்டி

திண்டிவனம், : திண்டிவனத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சு போட்டி நடந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல்மாலிக் சிறப்புரையாற்றினர்.போட்டியில் 224 கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் அமைச்சர் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார்.போட்டிக்கு நடுவர்களாக நெல்லிக்குப்பம் புகழேந்தி, லெனின், புவியரசி இருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாபு, உதயகுமார், விஜயகுமார், அண்ணாமலை.பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், பழனி, ஒன்றிய சேர்மன் தயாளன், கவுன்சிலர்கள் ரேகாநந்தகுமார், பார்த்திபன், சுதாகர், பரணிதரன், பிர்லாசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை