உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில அளவிலான போட்டி மாணவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான போட்டி மாணவர்களுக்கு பாராட்டு

விழுப்புரம்: மாநில அளவிலான பென் காக் சிலாட் போட்டியில் சாதித்த விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சூர்யா கல்வி குழும மைதானத்தில், 6 வது மாநில அளவிலான பென் காக் சிலாட் போட்டி நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவினருக்கும் இடையே தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி அணிகள் பங்கேற்றன. இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெற்று, பல்வேறு பிரிவுகளில் சாதித்து பதக்கம், பரிசுகளை பெற்றனர். அந்த மாணவர்கள் குழுவினரை, அரசு கல்லூரி முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் ஜோதிப்பிரியா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ