உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத் திறனாளியை தாக்கியவர் கைது

மாற்றுத் திறனாளியை தாக்கியவர் கைது

திண்டிவனம் : மாற்றுத் திறனாளி வாலிபரைத் தாக்கிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த முட்டியூர் குளத்து மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 29; மாற்றுத் திறனாளி. இவரது மூன்று சக்கர பைக் பழுதடைந்ததால், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள டூ வீலர் மெக்கானிக்கான மாணிக்கம், 26; என்பவரிடம் பைக்கை சீர் செய்ய கொடுத்துள்ளார்.பைக் சீர் செய்த பின் பாஸ்கர், மெக்கானிக் கேட்ட 2,300 ரூபாயை கொடுத்துள்ளார். பின், பைக்கை ஸ்டார்ட் செய்து சிறிது துாரம் சென்ற போது, மீண்டும் பழுதாகியது. இதுபற்றி மெக்கானிக்கிடம் கேட்ட போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம், அருகில் கிடந்த கத்தியை எடுத்து பாஸ்கர் தலையில் வெட்டினார். இதை பார்த்து தடுக்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரையும் வெட்டினார். காயமடைந்த இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில், மாணிக்கம் மீது வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை