| ADDED : ஜூலை 21, 2024 07:47 AM
செஞ்சி: செஞ்சி அடுத்த செத்தவரை மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செத்தவரை சிவஜோதி மோன சித்தர் பீடத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத பெருமான் கோவிலில் கடந்த மாதம் 2ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை 9:00 மணிக்கு சிறப்பு ஹோமமும், 11:00 மணிக்கு நல்லாண்பிள்ளை பெற்றாள் சாஸ்தா கோவிலில் இருந்து சிவ வாத்தியங்கள் முழங்க 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.பால் குடங்களுக்கு கோவில் வாசலில் சிவஜோதி மோனசித்தர் தலைமையில் வரவேற்பளித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். 1:00 மணிக்கு சொக்கநாதர், மீனாட்சியம்மன், விநாயகர், முருகருக்கு பால் அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.பிற்பகல் 2:00 மணிக்கு சொக்கநாதர், மீனாட்சியம்மன் பூ பல்லக்கில் கோவில் உலாவும், சிவஜோதி மோனசித்தர் அருளாசியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.