உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காணை தெற்கு ஒன்றிய பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பிரசாரம்

காணை தெற்கு ஒன்றிய பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பிரசாரம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காணை பகுதியில் பிரசாரம் நடந்தது.காணை தெற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாம்பழப்பட்டு, ஒட்டன்காடுவெட்டி, கோழிப்பட்டு, கொண்டியான்குப்பம், கூடலுார், டட் நகர் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, எம்.எல்.ஏ.,க்கள் அரவிந்த் ரமேஷ், பிரபாகர் ராஜா முன்னிலை வகித்தனர்.மாநில தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சேகர், தருண், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ராமசரவணன், மாவட்ட துணை சேர்மன் தங்கம், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, முன்னாள் ஊராட்சி தலைவர் நன்னாடு முத்துசாமி, நகர் மன்ற கவுன்சிலர் மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை