| ADDED : மே 08, 2024 11:53 PM
விக்கிரவாண்டி, : வி.சாலை நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற அரிசி மூட்டைகளை திருப்பி அனுப்ப மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார். விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் உள்ள நுகர் பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளின் தரத்தை நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா ஆய்வு செய்தார். அப்போது, 50 கிலோ எடை கொண்ட பச்சரிசி 580 மூட்டைகள் பூச்சி பிடித்து தரமற்று காணப்பட்டது. அவற்றை கொள்முதல் செய்த நிறுவனத்திற்கு திருப்பி அனுப்ப உத்திரவிட்டார்.பின், முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பன்முக உயர்தர சிகிச்சை பிரிவை பார்வையிட்டு, கல்லுாரி டீன் ரமாதேவியிடம் சிகிச்சை தரம் குறித்து கேட்டறிந்தார்.மாவட்ட கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான் ஷூன் நிகம், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் யுவராஜ், மண்டல மேலாளர் மனோகரன், உதவி தரக் கட்டுபாடு ஆய்வாளர் செல்வ தேவன், மேலாளர் சக்தி மனம், நகர்வு உதவியாளர் கபிலன், மருத்துவ கல்லுாரி டீன் ரமா தேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், தயாநிதி உட்பட பலர் உடனிருந்தனர்.