| ADDED : ஜூன் 27, 2024 11:48 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து உரிமையாளர்களிடம் அபரதாம் வசூலிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டிவனம் நேரு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட், செஞ்சி ரோடு, திண்டிவனம் - புதுச்சேரி ரோடு, மேம்பாலத்தின் கீழ் பகுதி, பழைய பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக காய்கறி மார்க்கெட்டில் அதிக அளவில் மாடுகள் திரிகின்றன.இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.சில தினங்களுக்கு முன் சட்டசபையில் அமைச்சர் நேரு பேசுகையில், சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகள் முதல் முறையாக பிடிபட்டால் 5,000 ரூபாய், இரண்டாவது முறை பிடிபட்டால் 10 ஆயிரம் ரூபாய், மூன்றாவது முறையாக பிடிபட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளார்.திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்துலாக திரியும் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.