உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடிநீர் பிரச்னையைத் தீர்க்க கலெக்டரிடம் கோரிக்கை மனு

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க கலெக்டரிடம் கோரிக்கை மனு

விழுப்புரம்: வானுார் அருகே கமலாபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வானுார் அடுத்த கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஊராட்சி உறுப்பினர் லாரன்ஸ் தலைமையில், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:உலகாபுரம் ஊராட்சிக்குட்பட்ட கமலாபுரம் கிராமத்தில் 500 பேர் வசிக்கிறோம். எங்களுக்கு, பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை தொடர்ந்து வருகிறது. உலகாபுரத்தில் ஆழ்துளை கிணறுபோட்டு, அதன் மூலம் எங்கள் கிராம சிறிய ஓவர் டேங்கிற்கு தண்ணீர் ஏற்றிவந்தனர்.ஆனால், குழாய் வழியாக வரும் மிக குறைந்த நீர் நிரம்பாமல், எங்களுக்கு வாரத்துக்கு 2 முறை மட்டுமே குடிநீர் வருகிறது.மழைக் காலங்களில் கூட மிகவும் குறைவான குடிநீர் வருதால், பிரச்னை ஏற்படுகிறது. இதனால், நாங்கள் குட்டைகளில் தேங்கும் நீரை எடுத்து குடிக்க வேண்டியுள்ளது.கமலாபுரத்திலேயே தனி கிணறும், 50 ஆயிரம் லிட்டர் ஓவர் டேங்க்கும் தனியாக கட்டித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, குடிநீர் பிரச்னையை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை