உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிள்ளையார்குப்பம் முருகன் கோவில் பங்குனி உத்திர விழா

பிள்ளையார்குப்பம் முருகன் கோவில் பங்குனி உத்திர விழா

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பில்லுார் பிள்ளையார்குப்பம் முருகன் கோவிலில், 40ம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா நடந்தது.அதனையொட்டி விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு, கோவிலில் இருந்து பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியே காவடி எடுத்தும், தேர் இழுத்தும் ஊர்வலமாக வந்தனர்.மதியம் 12:30 மணிக்கு வேண்டுதலுக்காக வந்த பக்தர்களுக்கு, மிளகாய்பொடி அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், கொதிக்கும் எண்ணெய் சட்டியில், கையால் வடை சுட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.மாலை 5:00 மணிக்கு இடும்பன் பூஜையும், இரவு 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் உற்சவர் முருகர் சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.இதேபோன்று, விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோவில், பூந்தோட்டம் மாரியம்மன் கோவில், வளவனுார் சுப்ரமணியர் கோவில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், பங்குனி உத்திர விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை