உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆய்வு கூட்டம்

மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆய்வு கூட்டம்

விழுப்புரம்: கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது தொடர்பான வாராந்திர கலால் ஆய்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கி, கூறியதாவது,விழுப்புரம் மாவட்டத்தில் டி.எல்., 2 உரிமம் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கியுள்ள ஸ்பிரிட்டை பெற்று முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் சாராயத்தை எங்கிருந்து வாங்கி குடித்தனர் என்பதை மருத்துவமனை சார்பில் பதியப்படும் விபத்து பதிவில் தெளிவாக பதிவு செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இது மட்டுமின்றி, புதுச்சேரி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரிடம் இருந்து பெறப்படும் கள்ளச்சாராயம், போதை பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு, அறிவுரை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், எஸ்.பி., தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், உதவி ஆணையர் (கலால்) முருகேசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை