உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புறவழிச்சாலையில் குவிந்த கட்டுமான கழிவுகள் அகற்றம்

புறவழிச்சாலையில் குவிந்த கட்டுமான கழிவுகள் அகற்றம்

வானுார் : 'தினமலர்' செய்தி எதிரொலியாக புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், இரும்பை சந்திப்பு அருகில் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டது.புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு ஏராமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இது மட்டுமின்றி இந்த சாலையையொட்டி, பல்வேறு குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என அதிகளவில் உள்ளன. சாலையில் சில மாதங்களாக சிலர் குப்பைகளையும், இறைச்சிக் கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.அப்பகுதியில் நடக்கும் கட்டடப் பணிகளின் போது இடித்து அகற்றப்படும் கட்டுமான கழிவுகளையும் சிலர் சாலையோரத்தில் மலை போல் கொட்டி குவிக்கின்றனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக டோல்கேட் நிர்வாகத்தினர், அப்பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை