உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் சாலை பணி துவங்கியது

திண்டிவனத்தில் சாலை பணி துவங்கியது

திண்டிவனம்: திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, நேரு வீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது.திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டு, பணிகள் முடிந்த நேரு வீதியில் புதிய சாலை போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.அதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் புதிய சாலை போடும் பணி துவங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில் திண்டிவனம் மேம்பாலம் அருகே உள்ள நேரு வீதியிலிருந்து செஞ்சி ரோடு வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நேற்று முதல் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை