உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரோட்டரி சங்கத்தினர் மருத்துவமனைக்கு கருவி வழங்கல்

ரோட்டரி சங்கத்தினர் மருத்துவமனைக்கு கருவி வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில், குளோபல் கிராண்ட் திட்டம் மூலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் அதிநவீன கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் கன்யா ரமேஷ் தலைமை வகித்தார். சுகாதாரத்துறை இணை இயக்குநர் லட்சுமணன், துணை இயக்குநர் சுதாகர், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் லதா, அறுவை சிகிச்சை டாக்டர் விக்டர்பவுலியா முன்னிலை வகித்தனர்.ரோட்டரி ஆளுநர் ராகவன் பங்கேற்று, அரசு மருத்துவமனைக்கு, ரூ.50 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை கருவிகள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை கூடம் மற்றும் நவீன ஸ்கேன் கருவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.ரோட்டரி திட்ட சேர்மன் சரவணக்குமார், திட்ட குழு நிர்வாகிகள் பாலகுருநாதன், கந்தன், நம்மாழ்வார், ஸ்ரீதர், ரோட்டரி வருங்கால ஆளுநர்கள் சிவசுந்தரம், செந்தில்குமார், லோகநாதன், பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை