உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொல்லியங்குணத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

கொல்லியங்குணத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

மயிலம், : மயிலம் அடுத்த கொல்லியங்குணத்தில் முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மயிலம் சேர்மன் யோகேஸ்வரி தலைமை தாங்கி முகாமமை துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமணி முன்னிலை வகித்தனர். டாக்டர் பாரதிதாசன் வரவேற்றார்.முகாமில் டாக்டர்கள் ரூபி, பாலாஜி, சரண்யா,ஜெயஸ்ரீ, கலையரசி, அனந்த லட்சுமி, ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு, மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிமாறன், செழியன், துணைச் சேர்மன் புனிதா ராமஜெயம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை