உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காலை உணவு திட்டம் துவக்கம்

காலை உணவு திட்டம் துவக்கம்

விழுப்புரம்: கோலியனுார் ஒன்றியம், செங்காடு அரசு நிதியுதவி பெறும் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் துவங்கியது.தலைமையாசிரியர் சகாயராஜ் தலைமை தாங்கினார். கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பி.டி.ஓ.,க்கள் ராஜவேல், வேங்கடசுப்ரமணியன், சார்லஸ் அமல் குழந்தைராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி குணசேகரன் வரவேற்றார். லட்சுமணன் எம்.எல்.ஏ., திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, துணைச் செயலாளர் ஜெயந்தி, மாவட்ட கவுன்சிலர் கேசவன், ஒன்றிய கவுன்சிலர்கள் சந்திரசேகரன், சவுந்தர்ராஜன், ஊராட்சி துணைத் தலைவர் மணிமாறன், வழக்கறிஞர் கண்ணப்பன், கவுன்சிலர் மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை