உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தைக்கு பெயர் சூட்டிய திருமாவளவன்

குழந்தைக்கு பெயர் சூட்டிய திருமாவளவன்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சி தலைவர் தொண்டரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து வி.சி., கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதியம் 2:00 மணிக்கு விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே திறந்த வேனில் பிரசாரம் செய்தார். பேச்சை முடித்தவுடன், திருமாவளவனிடம், பாலா - திவ்யா என்ற தம்பதி தங்களின் ஆண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டவனர். இதையேற்று, திருமாவளவன், வேனிலிருந்தபடியே மைக்கில் குழந்தைக்கு வெற்றிவேந்தன் என்ற பெயரை சூட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ