மேலும் செய்திகள்
போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை
3 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சப் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல், 42; இவர் மீது பொது இடத்தில் ஆபாச பேச்சு, பொது சொத்தை சேதப்படுத்திய வழக்குகள் உள்ளன. தற்போது, வள்ளலார் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.இவர் மீதான வழக்குகளின் பேரில் விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் வள்ளலார் நகர் சென்றார்.அங்கு, அவரை பழனிவேல் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட வந்தபோது, சிவகுருநாதன் சுதாரித்து கொண்டு தப்பினார்.இதுகுறித்து சிவகுருநாதன் அளித்த புகாரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.
3 hour(s) ago