உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

விழுப்புரம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.விழுப்புரம், வண்டிமேட்டை சேர்ந்தவர் கணேசன்,61; நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 21ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 சவரன் நகை மற்றும் ரூ.1.60 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.3.50 லட்சம். விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விரல் ரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை