உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்கம்பி அறுந்து விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லுார் : விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தடுத்தாட்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் மகன் சப்தகிரி, 11; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.இவரது உறவினர் கலியபெருமாள் மகன் லோகேஷ், 6; இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் நேற்று மதியம் 12:30 மணியளவில், அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள மோட்டார் கொட்டகையில் குளித்தனர்.அப்போது அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து சிறுவர்கள் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களின் உடலை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M S RAGHUNATHAN
ஜூன் 23, 2024 20:30

இறந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு அனுதாபம் மட்டும் தானா? ஏன் தலா 10 லக்ஷம் தரக் கூடாது. சிறுவர்கள் தவறு எதுவும் இல்லையே. சிறுவர்களின் பெற்றோர்கள் நீதி மன்றத்தில் வழக்கு போடவேண்டும். அல்லது உயர் நீதிமன்றம் இவ்வழக்கை தானாக முன் வந்து விசாரிக்க வேண்டும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை