உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஒன்றிய வாரியாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் கவுதமசிகாமணி தலைமை தாங்குகிறார். மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் , மகளிரணி தேன்மொழி முன்னிலை வகிக்கின்றனர். துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் பொன்முடி சிறப்புரை ஆற்றுகிறார். அரகண்டநல்லுார் எம்.கே.எம்.எஸ். பேப்பர் மில் வளாகத்தில், நாளை ( 26ம் தேதி) மாலை முகையூர் (வடக்கு-தெற்கு), மணம்பூண்டி ஒன்றியங்கள் மற்றும் அரகண்டநல்லுார் பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடக்கிறது. 27 ம் தேதி காலை கண்டமங்கலம் வள்ளி திருமண மண்டபத்தில், கண்டமங்கலம் (கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றியம்) , வானுார் (கிழக்கு - மேற்கு), கிளியனுார் ஒன்றியங்கள், கோட்டக்குப்பம், விழுப்புரம் நகர நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.வரும் 28 ம் தேதி காலை 10:00 மணிக்கு, கொசப்பாளையம் நிலா மெட்ரிக் பள்ளியில், காணை (தெற்கு, வடக்கு, மத்திய ஒன்றியம்), பகல் 12:00 மணிக்கு, பனையபுரம் எஸ்.ஆர்.திருமண மண்டபத்தில் விக்கிரவாண்டி (கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றியம்), மாலை 5:00 மணிக்கு, கோலியனுார் (கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றியம்) நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. வரும் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு, மணக்குப்பம் பி.எஸ். மகாலில் திருவெண்ணெய் நல்லுார் (மேற்கு), திருக்கோவிலுார் (கிழக்கு) ஒன்றியங்கள், திருக்கோவிலுார் நகரம், திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி