உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் விதிமுறை மீறல்; கட்சி கொடிகள் பறிமுதல்

தேர்தல் விதிமுறை மீறல்; கட்சி கொடிகள் பறிமுதல்

விழுப்புரம் : காணையில் தேர்தல் விதிமுறை மீறி வைத்துள்ள கட்சி கொடிகள், பேனரை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.காணை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சாலையின் இரு புறங்களிலும் தேர்தல் விதிமுறை மீறி வைத்திருந்த நாம் தமிழர் கட்சியின் 25 கொடி கம்பங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் கருங்காலிபட்டை சேர்ந்த சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.அதே போல், காங்கேயனுார் காலனியில் தேர்தல் விதிமுறை மீறி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வைத்திருந்த டிஜிட்டல் பேனரை போலீசார் பறிமுதல் செய்ததோடு, ஒன்றிய செயலாளர் ஜான்பீட்டர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ