உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை

வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன், 34; கூலித் தொழிலாளி. இவர் குடிபழக்கம் காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.கடந்த 30ம் தேதி இவரது மனைவி சங்கீதா தனது குழந்தையுடன் ஊருக்கு சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த போது மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதனால், மனமுடைந்த அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு சங்கீதா வீடு திரும்பிய போது வீட்டில் கணவர் துாக்கு போட்டு இறந்தது தெரியவந்தது.இதுகுறித்து சங்கீதா அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை