உள்ளூர் செய்திகள்

யோகா தின விழா 

செஞ்சி : அன்னமங்கலம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.கல்லுாரி தலைவர் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் டாக்டர் ஹரிகுமார் வரவேற்றார். 500கும் மேற்பட்ட மாணவர்கள் யோகாசனம் செய்தனர். யோகா மூலம் மாணவர்கள் உடல் ஆரோக்கியம் மன வளர்ச்சி பெறமுடியும் என்பதை மணவர்களுக்கு விளக்கப்பட்டது. செஞ்சி அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் முருகன், சொர்ணலதா, பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.சாணக்கியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சேகர் வரவேற்றார். செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மனவளக்கலை மன்ற பேராசிரியர் பாலு தலைமையில், துணை பேராசிரியர் சங்கர் உள்ளிட்ட குழுவினர் மாணவர்களுக்கு யோகா பயிற்சியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை