உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மீண்டும் சாராய சம்பவம்: விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 7 பேர் உடல் நலம் பாதிப்பு

மீண்டும் சாராய சம்பவம்: விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 7 பேர் உடல் நலம் பாதிப்பு

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியில் இருந்து கொண்டு வந்த சாராயத்தை குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக டாக்டர் தெரிவித்து உள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கடத்துவது தெரியவந்தால், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி அருகே மதுரா பூரிகுடிசை என்ற கிராமத்தில், புதுச்சேரியில் இருந்து கொண்டு வந்த சாராயத்தை குடித்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விழுப்புரம், விக்கிரவாண்டி வட்டம் கஞ்சனூர் மதுரா பூரி குடிசை கிராமத்தில் கடந்த 8 ம் தேதி புதுச்சேரி சாராயத்தை குடித்த 7 பேர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது. முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் போலீார் 7 பேரையும் அன்றே விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 5 நபர்கள் இன்று சிகிச்சை முடித்து இன்று( ஜூலை10) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள இரண்டு நபர்களுக்கு குடிபழக்கம் இருந்து வந்ததால், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.புதுச்சேரி சாராயம் வாங்கி வந்த நபர் மீது காஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் காரணமாக விக்கிரவாண்டி தொகுதியில் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 11, 2024 03:50

70 லட்சம் ரூபாய் மிச்சமாகி விட்டது. போ போ வேலை வெட்டிய பாருங்க


பீர்பால்
ஜூலை 10, 2024 19:30

கள்ள சரக்குதான் ஒத்துக்கும் போலிருக்கே நல்ல சர்க்கு ஓவ்வாமையை உண்டு பண்ணிருச்சு.


பேசும் தமிழன்
ஜூலை 10, 2024 18:54

அப்போ.... 10 லட்சம் கண்டிப்பாக கிடைக்கும்.... எவன் அப்பன் வீட்டு பணம்... உதவாத நிதி தான் கூற வேண்டும்.


hari
ஜூலை 10, 2024 18:45

பார்றா ஒரு முட்டு பயல்களையும் காணோம்.... ஆஸ்திரேலியா முட்டு... வீனா போன வேணு முட்டு..... மும்பை வதசன் எல்லாம் எங்கப்பா??


Kasimani Baskaran
ஜூலை 10, 2024 17:30

டாஸ்மாக்கில் விற்கும் போலிச்சரக்கில் எவனாவது மெத்தனால் கலக்காதவரை தீம்க்கா அரசு தப்பித்தது. பத்து ரூபாய் வசூலித்துக்கொடுக்கும் வாய்ப்பு


வாய்மையே வெல்லும்
ஜூலை 10, 2024 17:22

வேறென்ன மாடல் மாடல் மாடலோ மாடல் என இனிமே பெருமை பீத்தி கொள்ளுவோம். ஜெயலலிதா எம்ஜியார் இருந்த ஆளுமை ல்லாம் இனிமே எதிர்பார்க்கமுடியாது ...


R.P.Anand
ஜூலை 10, 2024 17:01

மனைவி: குடி நிறைய குடி ஆனா கள்ள சாராயமா பார்த்து குடி. குடி குடியை ெடுக்கும். கள்ள சாராயம் குடும்பத்தை காக்கும்....


theruvasagan
ஜூலை 10, 2024 17:33

மனைவி : குடி மகனே. பெரும் குடி மகனே..னே..னே. நான் குடுக்கட்டுமா அதை உனக்கு. நீ குடிச்சதும் நான் எடுக்கட்டுமா 10 லட்சம் எனக்கு.


theruvasagan
ஜூலை 10, 2024 16:51

கள்ளச் சாராயம் குடிச்சுட்டு செததா பத்து லட்சம். இந்த மாதிரி ஒரு அருமையான யோசனை இதுவரைக்கும் யாருக்காச்சும் தோணுச்சாயா. ஆனால் ஒண்ணு. குடிச்சு சாகாம ஆனால் மோசமான உடல்நல பாதிப்பு ஏற்பட்டவன் குடும்பத்துக்குள்ள இப்படி ஒரு ஏக்கம் பிறக்கலாம். ஐயோ. ஐயோ. ஒரு லட்சமா. ரெண்டு லட்சமா. பத்து லட்சமாச்சே. பத்து லட்சமாச்சே. எவனவெனோகுடிச்சுட்டு அடிச்சிட்டு போயிட்டானே. நமக்கில்லை.


K V Ramadoss
ஜூலை 13, 2024 12:56

நமக்கில்லை நமக்கில்லை ஐயோ குடிக்காத நமக்கு ஒண்ணுமில்லையே.....


Mani . V
ஜூலை 10, 2024 16:38

என்ன கோப்பால் இதெல்லாம்? இது நமக்குத் தெரியாமலா நடக்கிறது?


D.Ambujavalli
ஜூலை 10, 2024 16:35

'குடித்ததுதான் குடித்தான், அவன் யாருக்காகக் குடித்தான்? கள்ளச்சாராயம் குடித்தான்,பணம் 10 லட்சத்துக்காக குடித்தான்'


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை