உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு பஸ்சில் பெண்ணிடம் 18 சவரன் நகை திருட்டு: விழுப்புரத்தில் துணிகரம்

 அரசு பஸ்சில் பெண்ணிடம் 18 சவரன் நகை திருட்டு: விழுப்புரத்தில் துணிகரம்

விழுப்புரம்: சென்னை, தாம்பரம் பசுவஞ்சேரியை சேர்ந்தவர் சிங்காரவேலன் மனைவி சுபாஷினி, 45; இவர், விழுப்புரம் அருகே கோனுார் கிராமத்தில் உள்ள இவரது உறவினர் திருமணத்திற்காக, கடந்த 21ம் தேதி, சென்னை தாம்பரத்திலிருந்து தனது இரண்டு பிள்ளைகளுடன் திருச்சி செல்லும் அரசு விரைவு பஸ்சில் விழுப்புரம் வந்தார். தனது 18 சவரன் நகைகளை ஒரு டிராவல் பேக்கில் வைத்து எடுத்து வந்தார். அன்று இரவு விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பில் பஸ்சில் இருந்து இறங்கிய சுபாஷினி, குழந்தைகளுடன், பேக்கையும் எடுத்துக்கொண்டு கோனுார் செல்ல தயாரானார். அப்போது, பேக்கை பார்த்தபோது, அதிலிருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 18 சவரன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. உடனே, அருகே இருந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் பஸ்சில் சோதனை நடத்தி, பயணிகளிடம் விசாரித்தனர். விசாரணையில், சுபாஷினி பஸ்சில் பயணித்தபோது திண்டிவனம் பகுதியில் மர்ம நபர் ஒருவர், தனது பணம் கீழே விழுந்துவிட்டதாக கூறி, சுபாஷினி பேக் வைத்திருந்த பகுதியில் கி டந்த பணத்தை எடுத்துள் ளார். மேலும், விக்கிரவாண்டியில் ஒரு ஓட்டலில் இறங்கி சுபாஷினி டீ சாப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில், ஏதேனும் திருட்டு நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். இதுகுறித்து, சுபாஷினி கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை