உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திண்டிவனம் : திண்டிவனத்தில் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த கிடங்கல்-2 பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு, 42; இவர், நேற்று காலை 9:00 மணிக்கு, திண்டிவனம் மேம்பாலம் கீழே ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அப்போது, இவரது பாக்கெட்டில் இருந்த மணிபர்சை எடுத்துக் கொண்டு 2 பேர் தப்பியோடினர்.உடன் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து திண்டிவனம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், மாமண்டூர் இளஞ்செழியன், 42; இவரது தம்பி முராஜ், 40; எனவும், தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ