உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

விழுப்புரம்: பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த அஜய், 22; மற்றும் விழுப்புரம் சாலாமேட்டைச் சேர்ந்த பாலாஜி, 24; ஆகியோர் தங்கள் பைக்குகளில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாக வந்தது தெரிய வந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, அஜய், பாலாஜியை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி