மேலும் செய்திகள்
மஸ்ட் பெண்ணிடம் நகை திருட்டு
13-Oct-2024
திண்டிவனம்; திண்டிவனம் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் கிராமத்திலுள்ள போஸ்ட் ஆபிஸ் தெருவில் வசிப்பவர் சரசு,35; இவரது கணவர்மோகன் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகின்றார். சரசு அதே பகுதியிலுள்ள பெருமாள் கோவில் தெருவிலுள்ள உறவினர் வீட்டில்தான் எப்போதும் இருந்து வந்துள்ளார். இரவு மட்டும் தன்னுடைய வீட்டிற்கு படுத்துக்கொள்வதற்காக வருவார். இதே போல் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சரசு வீட்டிற்கு செ்ன்ற போது, பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகைகளை யாரோ கொள்ளையடித்து செ்ன்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சமாகும். இதுபற்றி சரசு ஒலக்கூர் போலீசில் நேற்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13-Oct-2024