உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

வானுார் : லோக்சபா தேர்தல் தொடர்பான வானுார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கிளியனுாரில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் பக்தவச்சலம், சதீஷ்குமார், ராமதாஸ் முன்னிலை வகித்தனர். சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார். வானுார் மற்றும் கிளியனுார் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வோ அல்லது கூட்டணிக்கோ சீட் ஒதுக்கீடு செய்யப்படலாம். யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.ஒவ்வொரு நிர்வாகிகளின் வீடுகளிலும், இரட்டை இலை சின்னத்துடன் சுவர் விளம்பரங்களை எழுத வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ