உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நல்லாவூர் நடுநிலைப்பள்ளியில் வான் நோக்கு நிகழ்ச்சி

நல்லாவூர் நடுநிலைப்பள்ளியில் வான் நோக்கு நிகழ்ச்சி

வானுார் : நல்லாவூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வான் நோக்கு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானுார் கிளை சார்பில், 'அறிவியல் மக்களுக்கே; அறிவியல் சுயசார்புக்கே; அறிவியல் சமூக மாற்றத்திற்கே' என்ற முழக்கத்தின் அடிப்படையில் வாசிப்பு, நுாலக இயக்கத்தை கட்டமைக்கும் நிகழ்வு மற்றும் வான் நோக்கு நிகழ்வு நடந்தது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். ஒன்றிய தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார், செயலாளர் சுமதி மாவட்ட கல்வி உபக்குழு மாநாடு சார்ந்த கருத்துக்களை வழங்கினார்.ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், வாசிப்பை நேசிப்போம், படித்ததில் பிடித்தது என்ற நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் வானூர் ஒன்றிய செயலாளர் நாகராஜன், வானவியல் கருத்தாளர் மாவட்ட இணை செயலாளர் அருள், வான் நோக்கு நிகழ்வு குறித்து விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை