உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கூட்டம்

விழுப்புரம்; விழுப்புரம் வடக்கு நகர அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகர செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை, அறிவுரை வழங்கி பேசினார். கூட்டத்தல், மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாலமுருகன், தெற்கு நகர செயலாளர் பசுபதி, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், ஜெ., பேரவை இணைச் செயலாளர் ரகுநாதன், நகர துணைச் செயலாளர் செந்தில், முன்னாள் நகர செயலாளர் ஜானகிராமன். மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், கோல்டுசேகர், நகர இளைஞரணி செயலாளர் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஜய், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெகன்நாதன், வார்டு செயலாளர்கள் அபிராமன், மூர்த்தி, கவுஸ்பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை