உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வீடு தேடி ரேஷன் பொருட்கள் நாளை முதல் வழங்க ஏற்பாடு

 வீடு தேடி ரேஷன் பொருட்கள் நாளை முதல் வழங்க ஏற்பாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (2ம் தேதி) முதல் 4ம் தேதி வரை தாயுமானவர் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோ கம் செய்யப்பட உள்ளது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி செய்திக்குறிப்பு: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் 71 ஆயிரம் பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந்தோறும் வாகனங்களில் பொது விநியோகத்திட்ட பொருட்களை கொண்டு சென்று, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாளை 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பொருட்கள், அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்