உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபரை தாக்கி பணம் பறிப்பு : இருவர் கைது

வாலிபரை தாக்கி பணம் பறிப்பு : இருவர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் வாலிபரை தாக்கி பணத்தை பறித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அருகே கோனுார் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் ராஜா,36; இவரும், இவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் கடந்த 9ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையம் அருகே மதுபானம் அருந்தினர். அப்போது, வி.மருதுார் சூர்யா என்பவர், சுரேஷிடம் மொபைல் பேச வாங்கியுள்ளார். பின், அவர் மொபைலை சுரேஷிடம் தராமல் சென்றுள்ளார்.பின், ராஜா நேற்று முன்தினம், விழுப்புரம் ரயில் நிலையம் அருகே வி.மருதுாரை சேர்ந்த ரஞ்சன் மகன் கோகுல்நாத்,29; ராமசாமி மகன் பாலாஜி,41; ஆகியோரிடம் சூர்யாவை பற்றி விசாரித்தார். அவர்கள், மொபைல் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று, ராஜாவை திட்டி, தாக்கி, ரூ.2 ஆயிரம் பணத்தை வாங்கி சென்றனர்.விழுப்புரம் டவுன் போலீசார் சூர்யா உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்து கோகுல்நாத், பாலாஜியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை