உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முருகன் கோவிலில் பாலாலயம்

முருகன் கோவிலில் பாலாலயம்

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது.அவலுார்பேட்டையில் உள்ள சித்தகிரி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் திருப்பணிகள் துவங்கப்பட உள்ளது. இதன் காரணமாக நேற்று காலை பாலாலயம் நடந்தது. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மேல்மலையனுார் ஒன்றிய சேர்மன் கண்மணி, செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின்அர்ஷத், கலா, ஊராட்சி தலைவர் செல்வம், துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், அறங்காவலர் குழு தலைவர் சுதா செல்வம், விழா குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !