உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சிறந்த கூட்டுறவு மேலாண்மை நிலையம் மண்டல இணை பதிவாளர் பாராட்டு

 சிறந்த கூட்டுறவு மேலாண்மை நிலையம் மண்டல இணை பதிவாளர் பாராட்டு

கள்ளக்குறிச்சி: சிறந்த கூட்டுறவு மேலாண்மை நிலையமாக தேர்வான ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மேலாண்மை நிலையத்திற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாராட்டு தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 72வது மாநில அளவிலான கூட்டுறவு வாரம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில், மாநில அளவில் சிறந்த கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கான பரிசு ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மேலாண்மை நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், மேலாண்மை நிலையத்தின் இயக்குநர் ரவியை நேரில் அழைத்து பாராட்டி, கேடயம் வழங் கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை