உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.3.86 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

ரூ.3.86 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

மரக்காணம் : மரக்காணம் அடுத்த நாகல்பாக்கத்தில் 3.86 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட நகர் கிராமத்தில் இருந்து நாகல்பாக்கம் கிராமம் செல்லும் சாலை மழையின் போது நீரில் மூழ்கி போக்குவரத்து பதிக்கப்படும். இதனால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நகர் கிராமத்தில் இருந்து நாகல்பாக்கம் மற்றும் அசப்பூர் செல்லும் சாலையின் நடுவே 55.54 மீட்டர் நீளம் உயர் மட்ட பாலம் கட்ட நபார்டு திட்டத்தின் மூலம் ரூ. 3.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் பாலம் கட்டும் பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. அமைச்சர் மஸ்தான் பணியை துவக்கி வைத்தார்.ஊரக வளர்ச்சி கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், சேர்மன் தயாளன், மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம், மாவட்ட கவுன்சிலர் குப்புராஜ், கவுன்சிலர் அர்ஜூனன், ஊராட்சி தலைவர் ஜெயமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை