உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புத்தகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

புத்தகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம், -விழுப்புரத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் முன்னிலைவகித்தார்.கூட்டத்தில், மாவட்டத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், இரண்டாவது புத்தகத் திருவிழா விழுப்புரம் நகராட்சித் திடலில் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில், 100 புத்தக அரங்குகள், எழுத்தாளர்கள், சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், மாவட்ட எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை